திராவிட உடன்பிறப்பு -

திராவிட மக்களின் உயிர் துடிப்பே; எங்கள் துயர் துடைக்க வந்த தலைவர் கருணாநிதிக்கு, உன் உடன்பிறப்பு வரையும் ஓர் அன்பு மடல். 40 வருடங்களாக உனக்கும், உன் கட்சிக்கும் உழைத்த உடன்பிறப்பு, இன்று திக்கற்று வழி தெரியாமல் நிற்கும் சமயத்தில், என் நம்பிக்கையை மீட்டுத்தருவாய் என கண்ணிரை மையாக்கி எழுதும் கடிதம்.

தலைவா, நேற்று உன் மகன், மகள், அக்காவின் குடும்பத்தினர் அனைவரும் சென்ட்ரல் மினிஸ்ட்ரி மற்றும் துணை முதலைமச்சர் பதவி அடைந்ததை கண்டு மனமாரமகிழ்ச்சி அடைந்தேன். ஆனா தலைவா, இதை பற்றி ஒரு பத்திரிகை ஆசிரியரிடம், "பத்திரிக்கைகாரன் மகன், பத்திரிகை வேலைதான் செய்வான்" என்று சொல்லிட்டீங்க.தலைவா, இது நாம் ராஜாஜியின் குல கல்வி திட்டம் போல் இருக்கே? இதுதான் தப்புன்னு சொல்லி எத்தனை மரத்தை, எத்தனை மக்களை உன் பேர் சொல்லி வெட்டி இருக்கேன், இப்ப திடிர்னு இப்படி சொல்லிடிங்க. சரி தலைவா, உனக்கு என்ன ஒரு பொண்டாட்டியா? 3 இருக்கே!!! அவுங்க இன்ன என்னைமாதிரி நீ போடுற ஒரு ரூபா அரிசில வாழ முடியுமா? பாரின் கார், பளிங்கு விடுன்னு பல செலவு இருக்கு, நீ என்ன பண்ணுவ பாவம்.

தலைவா, எனக்கும் உன்ன மாதிரி வயசு ஆகிபோச்சி. இத்தினை நாள், நீ சொன்ன மாதிரி, இந்து கடவுள் எல்லாத்தையும் அடியோடு வெட்டி போட்டாச்சு. இப்ப நீ என்னடான மஞ்ச துணிதான் போட்டுக்கிற, உன் பொண்டாட்டி உனக்காக திருக்கடையூரில் தவம் இருக்கு? நீ மேல இருக்க தலைவா, உனக்கு ஸ்பெஷல் காங்நேச்டின் இருக்கும், இங்க அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல, இப்ப நான் என்ன பண்றது?

எதைபத்தி கேட்டாலும் மீசாவில் நீயும் உன் மகன் ஸ்டாலின்னும் பட்ட கஷ்டத்தை பத்தி பல கதை சொல்றிங்க; அப்ப நான் என்னவோ நல்லாத்தான் இருந்தேன், இப்பதான்??? அது என்னவோ, நீ நல்ல இருக்கணும்னா நான் கஷ்டப்படனும் போல இருக்கு. அது சரி தலைவா, எவளவோ வாழ்கையில் இழந்தாச்சு, இன்னைக்கு நீ நல்ல இருக்க, அது போதும் தலைவா.

நீ இப்படினா நம்ப தம்பி அழகிரி ஒரு படி மேல. என்னமாதிரி கட்சிக்கு நாய உழைச்ச தா.கியை தம்பி போட்டு தள்ளினப்ப கொஞ்சம் கண்டிசிருக்கலாம்; இல்ல தம்பி நம்ப குடும்ப சண்டையில், கட்சி பத்திரிகை ஆபீஸ சுரையாடி நாலு/அஞ்சு உசுரு போனதுக்கப்புறமாவது கண்டிசிருக்கலாம். அது சரி போனது சுலபமா மாத்த குடிய தொண்டன் உசிருதானே. தம்பிக்கு சுத்தி போட சொல்லுங்க தலைவரே, என் கன்ணே பட்டுரும் போல.

இருக்கற தொல்ல போததுனு, ரெண்டு நாளைக்கு முன்னே, என் புள்ள, "அப்பா திராவிட கழகம் சாமி இல்லன்னு சொல்லுது அப்பறம் எதுக்கு அல்லாகிட்டயும், ஏசுகிட்டயும் போற, அதையும் துக்கி ஏறின்னு", சொல்றான். எனக்கு வந்துது பரு கோபம், பய்யன துக்கி போட்டு மீதிச்சும் என் கோபம் போகல்ல. அவன் கேட்டதுக்கு, எனக்கு பதில் தெரியல்ல அது ஒருபுறம், என் மெயின் கோபம் அவன் சுயம்ம எப்படி சிந்திக்கலாம்? தலைவா இந்த மாதிரி பசங்க, வளர உரமாய் இருந்திடகுடாது, இன்னைக்கு என்னை கேள்வி கேட்டவன் , நாளைக்கு உன்ன கேள்வி கேட்பான்.

என்னமோ தலைவா, ஒவ்வுறுதரவையும் நீயும் உடன்பிறப்பு, உடன்பிறப்பு சொல்லிக்கிட்டு இருக்கே, உனக்கு பிறந்த மக்கள்தான் நல்ல இருக்கான், மத்தவன் எல்லாம் பிச்சைதான் எடுகிறன்னு, இந்த ADMK பசங்க சொல்லிக்கிட்டு திரியறனுக, வெட்டத்தான் போய்கிட்டு இருந்தேன், போறதுக்கு முன்னாடி ஒரு தடவை கேட்டுகிட்டு போய்டலாம்ன்னு தோணிச்சு. அனா நீ ஒன்னும் கவலைபடாதே தலைவா, எனக்கு உன்ன தவிர வேற கதி?

அப்புறம் நீ வேற தமிழ் தமிழன்னு சொல்லிக்கிட்டு இருக்கே நான் எழுதி இருக்க தமிழ் சரி இல்லன்னு சொல்லி, ஆர்யா/திராவிட சண்டைய அரம்பிச்சுடாத, என்னக்கு தெரிஞ்ச தமிழ் அவளோதான். இத எழுத என்னக்கு ஒரு நாள் அச்சு.

Comments

m said…
lol..... amam.. i was thinking he has only 2...when did the 3 rd one (wife u)came?!
Slogger said…
Padmavathi - M.KA Muthu's mother
Dayalu Ammal - Alghagiri, Stalin
Rajathi Ammal - Kanimozhi
m said…
ok... now i remember once hearing the name of m.ka Muthu... somehow he got flushed out of the scene!
on the other hand, may be it is good for the people of TN.. otherwise still more complications in bhagapiriviani!

Popular posts from this blog

Globalization

கருணாநிதி -

Youth Wing