திராவிட உடன்பிறப்பு -
திராவிட மக்களின் உயிர் துடிப்பே; எங்கள் துயர் துடைக்க வந்த தலைவர் கருணாநிதிக்கு, உன் உடன்பிறப்பு வரையும் ஓர் அன்பு மடல். 40 வருடங்களாக உனக்கும், உன் கட்சிக்கும் உழைத்த உடன்பிறப்பு, இன்று திக்கற்று வழி தெரியாமல் நிற்கும் சமயத்தில், என் நம்பிக்கையை மீட்டுத்தருவாய் என கண்ணிரை மையாக்கி எழுதும் கடிதம். தலைவா, நேற்று உன் மகன், மகள், அக்காவின் குடும்பத்தினர் அனைவரும் சென்ட்ரல் மினிஸ்ட்ரி மற்றும் துணை முதலைமச்சர் பதவி அடைந்ததை கண்டு மனமாரமகிழ்ச்சி அடைந்தேன். ஆனா தலைவா, இதை பற்றி ஒரு பத்திரிகை ஆசிரியரிடம், "பத்திரிக்கைகாரன் மகன், பத்திரிகை வேலைதான் செய்வான்" என்று சொல்லிட்டீங்க.தலைவா, இது நாம் ராஜாஜியின் குல கல்வி திட்டம் போல் இருக்கே? இதுதான் தப்புன்னு சொல்லி எத்தனை மரத்தை, எத்தனை மக்களை உன் பேர் சொல்லி வெட்டி இருக்கேன், இப்ப திடிர்னு இப்படி சொல்லிடிங்க. சரி தலைவா, உனக்கு என்ன ஒரு பொண்டாட்டியா? 3 இருக்கே!!! அவுங்க இன்ன என்னைமாதிரி நீ போடுற ஒரு ரூபா அரிசில வாழ முடியுமா? பாரின் கார், பளிங்கு விடுன்னு பல செலவு இருக்கு, நீ என்ன பண்ணுவ பாவம். தலைவா, எனக்கும் உன்ன மாதிரி வயசு ஆக...